தமிழ் கணிப்பான் செயலி வெளியீடு
தமிழ் எண்களை கொண்ட அண்ட்ராய்டு கணிப்பான் செயலியை (Calculator Android App) உருவாக்கி Play Store இல் வெளியிட்டுள்ளேன்.
கடந்த 2022 ஆம் வெளியிடப்பட்ட தமிழ் கணிப்பான் செயலியை விட மேம்படுத்தப்பட்டது இது.
இந்த செயலியின் மூலம் தமிழ் எண்களில் கணிதம் செய்யலாம். தமிழின் சிறப்புகளில் ஒன்று பின்னம் (Fractions) குறியீடுகள். ஒவ்வொரு பின்னதிற்கும் தனி தனி குறியீடுகளும் பெயர்களும் உண்டு. அவற்றையும் இச்செயலியின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூடுதலாக, முக்கோணவியல் மற்றும் அறிவியல் சார்புகளையும் (Trigonometry & Scientific Functions) தமிழில் கணிதம் மேற்கொள்ள பயன்படுத்தும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளேன்.
இவை மட்டுமின்றி இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கிலோ, கிராம், மீட்டர், போன்று பண்டைய காலத்தில் தமிழர்கள் நமக்கென்று அளவை பெயர்கள் (Measurement Units) இருந்தன. இன்றைக்கு பல நவீன கணிப்பான் செயல்களில் Converter என்ற பெயரில் நவீன அளவை மாற்றிகள் இருக்கும். அதை போலவே பண்டைய கால அளவைகளை ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றும், அளவை மாற்றியையும் இந்த செயலியின் மூலம் பயன்படுத்தலாம்.
தமிழ் எண்களை கற்கவும் பயன்படுத்தவும் இச்செயலி உதவியாக இருக்கும் என உறுதிப்பட எண்ணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு இச்செயலியை சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் அண்ட்ராய்டு திறன் பேசியில் (Smart Phone) பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.velkadamban.tamcal
எவ்வாறு பயன்படுத்துவது: https://youtu.be/haLbZeKWxUg?feature=shared
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
நன்றி
வேல்கடம்பன்
+919489236687